1235 லீற்றர் டீசலை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது!
வரகாபொல, மாஹேன பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 1235 லீற்றர் டீசலை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வரகாபொல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.