அமெரிக்காவின் A-10 ரக விமானத்தின் மீது ஈரானிய பாதுகாப்புப் படையினர் ஏவுகணைத் தாக்குதல்!

அமெரிக்காவின் A-10 ரக விமானத்தின் மீது ஈரானிய பாதுகாப்புப் படையினர் ஏவுகணைத் தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் வைத்து அமெரிக்காவின் A-10 ரக விமானம் ஒன்றின் மீது ஈரானிய பாதுகாப்புப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது அதன் விமானி வான்குடை மூலம் வெளியேறி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானினால் நேற்று (3) சுட்டு வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் விமானியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த விமானமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.