அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளையத்தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

எந்தவித கலந்தாலோசனையும் இன்றி, அரசியல் நோக்கங்களுக்காக சட்டவிரோதமான முறையில் வைத்தியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது குறித்து வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவிக்கையில்,

தற்போது இடமாற்றங்களுக்காகப் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வாறானதொரு நடவடிக்கை இடம்பெற்றதில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, இந்த இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விருப்பமின்றி நாளை (31) காலை 08.00 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் நாளை (31) காலை வரை அவகாசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அவசர சிகிச்சை நடவடிக்கைகள் வழமை போல் முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.