அதிகரிக்கப்படவுள்ள சமையல் எரிவாயுவின் விலை- லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் எரிசக்தி உற்பத்திக்கு நிலவும் கேள்வியின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி புதிய விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.