சிமெந்து விலை அதிகரிப்பு!
சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபா முதல் 175 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கட்டுமானத் துறையில் மணல், கல் மற்றும் இரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டெரிங்டன் போல் தெரிவித்துள்ளார்.