சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்!
ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் எனவும் அதுவரையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டில், நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.