சட்டவிரோத மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

சட்டவிரோத மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (3) அதிகாலை 3.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.