சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை 12.30 மணியளவில் நாட்டை வந்தடைந்த வேளை, இந்தத் தாவரங்களுடன் வெளியேற முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதியில் காகிதங்களால் சுற்றப்பட்ட நிலையில் இந்த அலங்காரத் தாவரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாவரங்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு அவரிடம் முறையான இறக்குமதி அனுமதிப்பத்திரமோ அல்லது தாவர சுகாதார பாதுகாப்பு சான்றிதழோ இருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக முறையான சுங்க விசாரணைகளை மேற்கொண்ட கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட தாவரங்களை அழிப்பதற்காக கட்டுநாயக்க தாவர தனிமைப்படுத்தல் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.