இலங்கைக்கான ஈரான் தூதுவர் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நேற்றையதினம் ஈரான் தூதரகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் குறித்தும், ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.