இணையவழி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சீனமற்றும் கம்போடிய நாட்டு பிரஜைகள் கைது!

இணையவழி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சீனமற்றும் கம்போடிய நாட்டு பிரஜைகள் கைது!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 சீனப் பிரஜைகளும், இரண்டு கம்போடியப் பிரஜைகளும் நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்த விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கைதான வேளையில், பெருமளவிலான கணினிகள் மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 2026.04.06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.