இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில்; பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணிக்கு 20-30 கி.மீ. வரை காணப்படும். புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

கடல் நிலையானது, புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பகுதிகள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.