இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனியுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்பிராந்தியங்களில், களுத்துறையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏனைய கடற்பிராந்தியங்களில் சாதாரண வானிலை நிலவும்.

காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20-30 KM வரை காணப்படும்.

நாட்டை சூழவுள்ள கடல் பகுதிகள் சாதாரண நிலையில் காணப்படும். எனினும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.