இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை வேளையில் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை கடற் பிராந்தியங்கயில், கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது திசை மாற்றமின்றியும் மணிக்கு 20-30 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் சாதாரண நிலையில் காணப்படும், எனினும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.