க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்- அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்- அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளடங்கலாக மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை 2025ல், அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார்.

அத்துடன் காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அதே போல உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் டிலான் சஞ்சன அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.