க.பொ.த உயர்தரத்தில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில்முதல் இடம் பெற்ற தமிழ் மாணவன்!

க.பொ.த உயர்தரத்தில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில்முதல் இடம் பெற்ற தமிழ் மாணவன்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளடங்கலாக மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை 2025ல், அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கும் பள்ளிக்கல்வி சூழலுக்கும் பெருமையூட்டும் தருணமாக அமையப்பெற்றுள்ளது.

பலரும் குறித்த மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.