கணிதப் பிரிவில் 3 ஏ சித்தியடைந்த மாணவனின் திடீர் மரணம்!

கணிதப் பிரிவில் 3 ஏ சித்தியடைந்த மாணவனின் திடீர் மரணம்!

2025ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தியடைந்த யாழ்ப்பாணம் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணுவில் பிரதேசத்தை சேர்ந்த லவன் அக்சயன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்மையில் வெளியான 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 3 A சித்திகள் பெற்றிருந்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார். இந்நிலையில் மாணவனின் மரணம் அனைவரது மத்தியிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.