கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'குஷ்' ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'குஷ்' ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

'குஷ்' ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரை சோதனையிட வேளையில், அவர் எடுத்து வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 சைலன்சர்களுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அந்த சைலன்சர்களுக்குள், 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 25 கிலோ 500 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான "சிவப்பு வழி" ஊடாக இந்த போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே சந்தேகநபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.