கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- விசாரணைகள் ஆரம்பம்!
பிங்வத்த, லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக்கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர் ஒருவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பிங்வத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.