மாலபே பகுதியில் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!
மாலபே பகுதியில் 3 கிலோவிற்கும் அதிகளவான போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, கெகுணகஹவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலபே பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாலபே கஹந்தோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதான சந்தேக நபரிடம் இருந்து 1 கிலோ 728 கிராம் ஹெரோயின், 1 கிலோ 171 கிராம் ஐஸ் மற்றும் 497 கிராம் குஷ் போதைப்பொருள் ஆகியனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.