மார்ச் மாதம் எரிபொருள் விலை திருத்தம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, விலை திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும் எரிபொருள் ஒதுக்கீடு முறைமை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.