மே மாதம் வரை நாட்டிற்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில்!

மே மாதம் வரை நாட்டிற்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில்!

மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டிற்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள பிரச்சினை எரிபொருள் இல்லாமை அல்ல. 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் ஒரு கப்பல் வருகிறதென்றால், நாம் 40,000 மெட்ரிக் தொன் இடைவெளியை உருவாக்குகிறோம்.

கடந்த காலங்களில் டீசல் பயன்பாடு 150 சதவீத விகிதத்தில் அதிகரித்தது. அப்போது 40-க்கு பதிலாக 60 செலவானது. இது இன்னும் சற்று அதிகரித்தால், இலங்கைக்குள் எரிபொருள் இல்லாத ஒரு நாள் வரும்.

QR குறியீடு இருப்பதால் இந்தப் பிரச்சினை ஏற்படாது. மாதந்தம் நுகரப்படும் அளவு எப்படியும் இலங்கைக்கு வந்தடையும்.

எங்கு இதனைப் பெற்றுக்கொள்வது என்பதே பிரச்சினையாக எழுகிறது. ஒரு வாகனத்திற்குச் சற்று மேலதிகமாக எரிபொருள் நிரப்புவதால் பெரிய பிரச்சினை ஏற்படாது.

இலங்கையிலுள்ள எரிபொருள் கையிருப்பின்படி, எரிபொருள் தீர்ந்துபோகாது. ஆனால் மக்கள் எரிபொருளைச் சேமித்து வைப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது.

சிலர் எங்களிடம் 18 எரிபொருள் பவுசர்களைக் கோரியிருந்தனர். அவர்கள் சாதாரணமாக 3 பவுசர்களையே கொள்வனவு செய்பவர்கள். ஏன் என்று கேட்டபோது, அடுத்த 6 மாதங்களுக்குத் தேவை என அவர்கள் கூறினர்.

நாங்கள் அவ்வாறு எரிபொருளைக் கொண்டு வருவதில்லை. அனைவரும் இவ்வாறு அதிகளவில் சேமிக்கத் தொடங்கினால், 6 மாதங்களுக்கு வர வேண்டிய எரிபொருள் வழமை போலவே வந்தாலும், திடீரென ஒரு தொகுதியினர் சேமித்து வைப்பதால், அன்றாடம் எரிபொருள் நிரப்புபவர்களுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் போகும். சாதாரண நுகர்வு முறையைப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.