மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவர் கைது!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் இன்று (26) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகனங்களை மோசடியான முறையில் பதிவு செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி முன்னாள் அபிவிருத்தி உதவியாளர் (வீதி பாதுகாப்பு) - மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் முறையான ஆரம்பப் பதிவு இல்லாத 03 வாகனங்களை சட்டவிரோதமாகப் மாற்றம் செய்வதற்குத் தரவுகளை உள்ளிட்டமைக்காகவும்,
முன்னாள் விசாரணை உதவியாளர் - ஆரம்பப் பதிவு இல்லாத அந்த 03 வாகனங்களை சட்டவிரோதமாகப் மாற்றம் செய்வதற்காக கருமபீட இலக்கங்களை வழங்கியமைக்காகவும்,
முன்னாள் உதவி ஆணையாளர்: முறையான ஆரம்பப் பதிவு இல்லாத அந்த 03 வாகனங்களை சட்டவிரோதமாகப் மாற்றம் செய்வதற்கு அனுமதி அளித்தமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.