NPP நாடாளுமன்ற உறுப்பினர் சென்ற கார் மதில் ஒன்றில் மோதி விபத்து!
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ள்ளது.
விபத்து இடம்பெற்றவேளை நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.