பிக் மெட்ச் ஏற்பாட்டுப் பணிகளுக்கு சென்ற மாணவர்கள் இருவர் பேருந்தில் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

பிக் மெட்ச் ஏற்பாட்டுப் பணிகளுக்கு சென்ற மாணவர்கள் இருவர் பேருந்தில் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் (பிக் மெட்ச்) ஏற்பாட்டுப் பணிகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மற்ற மாணவன் காயமடைந்த நிலையில் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கண்டி - திகனை வீதியில் பல்லேகல இராணுவ முகாமிற்கு முன்பாக, திகனை திசையிலிருந்து வந்த பேருந்துடன் மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில், இருவரும் பேருந்தில் சிக்கி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.