போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது- வவுனியாவில் சம்பவம்!

போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது- வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதான நபர்களிடம் இருந்து இருந்து 1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.