தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி!

தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி!
Photo by Aslı Yaren Peker / Unsplash

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும்.

இதன்படி, கடந்த வாரம் 17ஆம் திகதி 408,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று (24) 370,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை கடந்த வாரம் 17ஆம் திகதி 375,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 340,400 ரூபாவாகக் வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,344 டொலர்களாகக் பதிவாகியுள்ளது.