யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு!

யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றையதினம் உத்தியோகபூர்வமாக (25) பதவி ஏற்றுக்கொண்டார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதவி ஏற்பு நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர் எஸ். சிறிசற்குணராசா, பதிவாளர் காண்டீபன், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.