யாழில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்!

யாழில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்!

சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரைடாலின் போது, யாழ். மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.

அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வருதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுதல், விவசாயம் மீன்பிடி போன்ற அத்தியாவசிய தேவைப்பாடுகளுக்கு எரிபொருள் சீராக விநியோகத்தினை வழங்குதல் தொடர்பாகவும், மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பாக உரிய மேலதிக வழிகாட்டுதல்களைப் பெற்று வழங்குவது தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.